பிரதமருக்கு மம்தா பானர்ஜி திடீர் கடிதம்
நீட் தேர்வில் ஏற்பட்ட முறைகேடு சர்ச்சைக்கு பிறகு மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையை மாநில அரசுகளே முடிவெடுக்கும் பழைய முறையை மீண்டும் கொண்டு வர வேண்டும் என்று மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார். இந்நிலையில், மேற்கு வங்க சட்ட மன்றத்தில், நீட் தேர்வுக்கு எதிரான தீர்மானம் நேற்று தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இன்று இது தொடர்பான விவாதத்திற்கு பிறகு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. விரைவில் கர்நாடகாவிலும் நீட் தேர்வுக்கு எதிராக மசோதா கொண்டு வரப்படும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
Next Story