"நீங்க தான் ; அப்போ என்ன பேச்சு பேசியிருக்கீங்க.." - மோடியின் வீடியோவை வைத்தே பங்கம் செய்த கனிமொழி

x

தி.மு.க துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி, பிரதமர் நரேந்திர மோடி குஜராத் முதலமைச்சராக இருந்தபோது, பொது நிதிப் பகிர்வு பற்றி பேசிய காணொலியை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில், ஒவ்வொரு வருடமும் குஜராத் மாநில அரசு, மத்திய அரசுக்கு வரியாக 60 ஆயிரம் கோடியை அளித்து வருவதாகவும், பதிலாக குஜராத் அரசுக்கு என்ன கிடைக்கிறது? ... 8 ஆயிரம் கோடி, 10 ஆயிரம் ஆயிரம் கோடி..12 ஆயிரம் கோடி என மோடி கூறியதாக சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், எப்போதும் தாங்கள் திருப்பிக் கொடுத்தோம், போதுமான அளவு திருப்பிக் கொடுத்தோம் என்று மத்திய அரசு கூறுவதாக மோடி கூறியதைக் குறிப்பிட்டுள்ளார். குஜராத் மாநில அரசை என்ன பிச்சைக்காரர் என்று நினைக்கிறீர்களா?... மத்திய அரசிடம் இருந்து தங்கள் நிதியைப் பெற எப்போதும் குஜராத் மாநில அரசு பிச்சை எடுக்க வேண்டுமா? என்று, குஜராத் முதலமைச்சராக இருந்த போது மோடி பேசிய வீடியோவை கனிமொழி சுட்டிக்காட்டியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்