மோடியிடம் புதின் சொன்ன ஒற்றை வார்த்தை - உற்று நோக்கும் இந்தியா

x

மக்களவையில் இன்று கேள்வி நேரத்தின் போது, கேரள எம்பி அடூர் பிரகாஷ், இந்திய இளைஞர்கள் பலர்வெளிநாடுகளில் வேலை வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறி ஏமாற்றப்பட்டு ரஷ்ய இராணுவத்தில் பணியமர்த்தப்பட்டு இருப்பதாக கூறினார். இந்த விவகாரத்தில் மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என அவர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், ரஷ்ய ராணுவத்தில் இந்திய இளைஞர்கள் சேர்க்கப்பட்டது தொடர்பாக 91 வழக்குகள் பதிவாகி இருப்பதாக குறிப்பிட்டார். இந்திய அரசின் உதவியுடன் 14 பேர் ரஷ்ய இராணுவத்திலிருந்து விடுவிக்கப்பட்டு நாடு திரும்பியுள்ளதாகவும், 69 இந்தியர்கள் ரஷ்ய இராணுவத்திலிருந்து விடுவிக்கப்படுவதற்காக காத்துக் கொண்டிருப்பதாக கூறினார். ரஷ்ய நாட்டு ராணுவ சேவையில் எந்த ஒரு இந்தியராவது இருந்தால் விரைவில் அவர்கள் விடுவிக்கப்படுவார்கள் என ரஷ்ய அதிபர் புதின் பிரதமர் மோடியிடம் உறுதி அளித்து இருப்பதாக குறிப்பிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்