புரட்டி போட்ட ரீமால் புயல் பாதிப்பு - பிரதமர் மோடி உறுதி | Pmmodi | Cyclone Remal | ThanthiTV
வங்கக் கடலில் உருவாகி, கடந்த 26ஆம் தேதி கரையை கடந்த ரீமால் புயலால், மேற்கு வங்கம், அசாம், மணிப்பூர் உள்ளிட்ட மாநிலங்களில் கனமழை மற்றும் வெள்ளம் ஏற்பட்டது. வெள்ளம் வடியாததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள பிரதமர் மோடி, புயலுக்குப் பிறகு மேற்குவங்கம், அசாம், மணிப்பூர், மேகாலயா, மிசோரம் ஆகிய மாநிலங்களில் ஏற்பட்டுள்ள இயற்கை பேரிடர் துரதிஷ்டவசமானது என குறிப்பிட்டுள்ளார். பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு வழங்கும் என தெரிவித்துள்ள பிரதமர் மோடி, சூழ்நிலையை உன்னிப்பாக கண்காணித்து வருவதாக கூறியுள்ளார். மேலும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி அதிகாரிகள் களத்தில் பணியாற்றி வருவதாகும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.-
Next Story