``விரைவில் ஆப்பு..! சும்மா விடமாட்டார் நாயுடு.. .மோடி அரசை கவிழ்ப்பார்..'' - தயாநிதி மாறன்

x

மத்திய பட்ஜெட்டில் தமிழகத்திற்கு நிதி ஒதுக்கவில்லை என குற்றம் சாட்டி, மத்திய அரசை கண்டித்து திமுக சார்பில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தயாநிதி மாறன், கலாநிதி வீராசாமி மேயர் பிரியா உள்ளிட்டோர் பங்கேற்றனர். கூட்டத்தில் இந்தி பேசும் மாநிலங்களுக்கே மோடி அரசு நிதி ஒதுக்கீடு செய்கிறது என குற்றம் சாட்டிய தயாநிதி மாறன், ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு மோடி அரசை கவிழ்ப்பார் ஆருடம் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்