``முதலில் இதை செய்யுங்கள்..'' - ``92% பேர் SC, ST, OBC பிரிவினர்" - அமித்ஷாவுக்கு கார்கே பதிலடி

x

காஷ்மீரில் பிரசாரம் செய்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மோடியை ஆட்சியிலிருந்து நீக்கும் வரையில் இறக்க மாட்டேன் என்றார். இதற்கு பாஜகவினர் கடும் எதிர்ப்பை தெரிவிக்க, பிரதமர் மோடி மீது காங்கிரஸ் எவ்வளவு வெறுப்பு, அச்சம் கொண்டிருக்கிறது என்பதை கார்கே பேச்சு காட்டுவதாக அமித்ஷா விமர்சித்தார். இதற்கு பதிலளித்திருக்கும் கார்கே, மணிப்பூர் கலவரம், ஜாதிவாரி கணக்கெடுப்பு போன்ற முக்கிய பிரச்சனைகளில் அமித்ஷா கவனம் செலுத்தட்டும் என கூறியிருக்கிறார். நகர்ப்புற சாக்கடைகள், கழிவுநீர் தொட்டிகளை சுத்தம் செய்யும் தொழிலாளர்களில் 92% பேர் SC, ST, OBC பிரிவை சேர்ந்தவர்கள் என பாஜக சொந்த அரசாங்கம் சொல்கிறது, SC, ST, OBC பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பினர் மற்றும் இதர அனைத்து வகுப்பினரும் என்னென்ன வேலை செய்கிறார்கள் எவ்வளவு சம்பாதிக்கிறார்கள் என்பது தெரிந்து விடும் என்பதால் ஜாதிவாரி கணக்கெடுப்பை பாஜக எதிர்ப்பதாக கூறியுள்ளார். ஜாதிவாரி கணக்கெடுப்பை மேற்கொள்ள காங்கிரஸ் உறுதி பூண்டு இருப்பதாகவும், அதை செய்வோம் எனவும் கார்கே கூறியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்