பிரதமர் மோடியை சந்தித்த அமெரிக்க பாதுகாப்பு ஆலோசகர்-உறுதி
பிரதமர் மோடியை அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சுல்லிவன் சந்தித்துப் பேசினார்.
டெல்லியில் நடைபெற்ற இந்த சந்திப்பின்போது இருதரப்பு ஒத்துழைப்பால் செயற்கை நுண்ணறிவு, தொலைதொடர்பு, பாதுகாப்பு, விண்வெளி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து பிரதமர் மோடியிடம் ஜேக் சுல்லிவன் எடுத்துரைத்தார். அப்போது இருதரப்பு உறவின் வளர்ச்சி குறித்து பிரதமர் மோடி திருப்தி தெரிவித்தார். சமீபத்தில், இத்தாலியில் நடைபெற்ற ஜி-7 உச்சி மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடனான உரையாடல் ஆக்கப்பூர்வமாக இருந்ததாக தெரிவித்த பிரதமர் மோடி, புதிய ஆட்சிக் காலத்தில் உலகளாவிய கூட்டாண்மையை இன்னும் அதிக உயரத்திற்கு கொண்டு செல்வதை மீண்டும் உறுதிப்படுத்தினார்.
Next Story