பாமக மாவட்ட செயலாளரை மர்ம கும்பல் தாக்கும் பரபரப்பு சிசிடிவி காட்சி.. காரணம் என்ன?
பாமக கோவை கிழக்கு மாவட்ட செயலர் அசோக் ஸ்ரீநிதி, தன்னை யாரோ மர்ம நபர்கள் கொலை செய்ய முயற்சி செய்ததாக காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளார்.
புகார் குறித்து தெரிவித்த அசோக் ஸ்ரீநிதி, 2 ஆயிரத்து 517 கோடி ரூபாய் மை வி3 ஆப் மோசடி குறித்து பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார். ஆனால், ஒரு வருடம் ஆகியும் ஆப் முடக்கப்படவில்லை என்றும், தற்போதும் பொதுமக்களிடம் பணம் வாங்கி வருவதாகவும் குற்றம் சாட்டினார். 6 மாதம் முன்பு கொலை மிரட்டல் வந்ததாகவும், 2 நாட்களுக்கு முன்பு லட்சுமி மில் அருகே 3 பேர் ஆயுதங்களை வைத்துக்கொண்டு கொலை செய்ய முயன்றதாகவும் கூறினார். தன்னை துரத்திக்கொண்டு வந்ததாகவும், காவல்நிலையத்தில் புகார் அளித்தும் யாரும் கைது செய்யப்படவில்லை என்றும் குற்றம் சாட்டினார். தனக்கு பாதுகாப்பு வழங்காததால் காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளதாகவும் கூறினார். அசோக் ஸ்ரீநிதியை மர்ம கும்பல் தாக்கும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.