அண்ணாமலை நடைபயணத்தில் பிரமாண்ட பிரதமர் மோடி சிலை.. ஒரு நாளைக்கு வாடகை இவ்வளவா..!
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் நடைபயணத்தில் பிரதமர் மோடியின் சிலை இடம் பெற்றுள்ளது. என் மண், என் மக்கள் என்ற பெயரில் அண்ணாமலையின் நடைபயணம் கடந்த 15-ஆம் தேதி முதல் கன்னியாகுமரியில் நடைபெற்று வருகிறது. இதையொட்டி, சுமார் 15 அடி உயரம் கொண்ட பிரதமர் மோடியின் சிலை அமைந்துள்ள வாகனம் இயக்கப்பட்டு வருகிறது. இரு பக்கமும் தலையை திருப்பி, கைகளை அசைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த சிலை, கேரள மாநிலத்தில் இருந்து வரவழைக்கப்பட்டுள்ளது. இதற்கான வாடகை நாளொன்றுக்கு 25 ஆயிரம் ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story