மதுபான ஊழல் செய்தவருக்கு திருப்பதி அறங்காவலர் குழுவில் இடம்? - பாஜக தலைவர் கடும் கண்டனம்

x

மதுபான ஊழல் செய்தவருக்கு திருப்பதி அறங்காவலர் குழுவில் இடம்? - பாஜக தலைவர் கடும் கண்டனம்

டெல்லி மதுபான ஊழலில் தொடர்புடைய சரத் சந்திரா ரெட்டிக்கு திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழுவில் இடம்பெற்றிருப்பதற்கு கண்டனம் எழுந்துள்ளது. இது குறித்து ஆந்திர பாஜக தலைவர் புரந்தரேஸ்வரி எக்ஸ் சமூக வலைத்தள பக்கத்தில், ஜெகன் மோகன் ரெட்டி அரசின் இந்த செயல் அறங்காவலர் குழு, அரசியலில் வாய்ப்பற்றவர்களுக்கு பதவி அளிக்கும் அமைப்பாக மாற்றப்பட்டிருப்பதை உறுதி செய்கிறது என பதிவிட்டுள்ளார். மதுபான ஊழலில் தொடர்புடையவர், மருத்துவ கல்லூரிக்கு பணம் வாங்கி கொண்டு அனுமதி அளித்தவர் ஆகியோருக்கு தேவஸ்தான அறங்காவலர் குழுவில் இடம் அளித்தது கடுமையாக கண்டிக்க வேண்டிய விஷயம் என்று குறிப்பிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்