பவன் கல்யாணுக்கு எகிறும் எதிர்ப்பு..சொந்த கட்சி கொடியை எரித்து போராட்டம் -

x

பவன் கல்யாணுக்கு எகிறும் எதிர்ப்பு..சொந்த கட்சி கொடியை எரித்து போராட்டம் - அனல் பறக்கும் `ஆந்திர’ அரசியல்

ஆந்திராவில், பிட்தாபுரம் தொகுதியை பவன் கல்யாணுக்கு ஒதுக்கியதற்காக, தெலுங்கு தேசம் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்...ஆந்திர மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதில், தெலுங்கு தேசம் கட்சி, ஜனசேனா கட்சி மற்றும் பாஜக ஆகியவை கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்கின்றன. இந்நிலையில், பிட்தாபுரம் தொகுதியில் பவன் கல்யாண் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது. இதற்கு தெலுங்கு தேசம் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பிட்தாபுரம் தொகுதியை தெலுங்கு தேசம் கட்சிக்கு ஒதுக்க வேண்டுமெனக் கோரி போராட்டம் நடத்திய அக்கட்சி தொண்டர்கள், தங்கள் கட்சிக் கொடியை எரித்து எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.


Next Story

மேலும் செய்திகள்