"ஆளுநருக்கான அதிகார வரம்புகள் குறைக்கப்பட வேண்டும்"
கன்னியாகுமரியில் இன்று நடைபெற்ற திமுக நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கை குழுவினருடனான சந்திப்பில் நெல்லை, தென்காசி, குமரி மாவட்டங்களை சேர்ந்த பல்வேறு அமைப்புகள் கலந்து கொண்டனர். அப்போது, 200க்கும் மேற்பட்ட பரிந்துரைகளை முன் வைத்துள்ளனர். அதில், மக்கள் நலத்திட்டங்களின் பெயர்கள் இந்தியில் மட்டும் இருப்பதை கண்டிக்க வேண்டும் என்றும், ஆளுநருக்கான அதிகார வரம்புகள் குறைக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினர். கன்னியாகுமரியில் சர்வதேச விமான நிலையம் அமைக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.Parliamentary Election
Next Story