மக்களவையில் ராகுல் கேட்ட கேள்வி.. "2010ல் சட்டங்களை நிறைவேற்ற துணிவில்லை".. காட்டமாக வந்த பதில்

x

நாட்டில் தேர்வு நடைமுறையே மிகப்பெரிய மோசடி என்ற முடிவுக்கு மாணவர்கள் வந்துவிட்டதாக மத்திய அரசை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி காட்டமாக விமர்சித்தார்.

மக்களவை கேள்வி நேரத்தில் நீட் தேர்வு குறித்து பேசிய எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, நாட்டில் தேர்வு நடைமுறை மிகத்தீவிர பிரச்சினையில் இருக்கிறது என குற்றம் சாட்டினார். ஒட்டுமொத்த தேர்வு நடைமுறையிலும் மோசடி என்ற முடிவுக்கு மாணவர்கள் வந்துவிட்டார்கள் என்றவர், பணம் இருந்தால் தேர்வு நடைமுறையை விலைக்கு வாங்கலாம் என்ற நம்பிக்கை வந்துவிட்டதாகவும் குற்றம் சாட்டினார். பிரச்சினைகளில் கல்வித்துறை அமைச்சர் மற்றவர்கள் மீது பழிபோடுகிறார் என்ற ராகுல் காந்தி, அமைப்பு ரீதியான பிரச்சினைகளை சரிசெய்ய மத்திய அரசு என்ன செய்யப்போகிறது என கேள்விகளை எழுப்பினார். அதற்கு பதிலளித்து பேசிய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், ஒரு பொய்யை உரக்கச் சொல்வதால் அது உண்மையாகிவிட முடியாது என்றார். நாட்டின் ஒட்டுமொத்த தேர்வு நடைமுறையையும் மோசடி என எதிர்க்கட்சி தலைவர் சொல்வது துரதிஷ்டவசமானது என குறிப்பிட்ட தர்மேந்திர பிரதான், ரிமோட் கண்ட்ரோல் மூலமாக ஆட்சியை நடத்தியவர்களுக்கு, 2010 ஆம் ஆண்டு அவர்கள் ஆட்சியில் கபில் சிபல் கல்வி நிலையங்களில் மோசடிகளை தடுக்கும் வகையில் கொண்டுவந்த 3 சட்டங்களை நிறைவேற்ற துணிவில்லை, நாங்கள்தான் அந்த சட்டத்தை நிறைவேற்றினோம் என காங்கிரசை சாடினார்.


Next Story

மேலும் செய்திகள்