"3 ஆண்டுகள் ஆகிவிட்டது".. அவையில் நேருக்கு நேர் கேட்ட தமிழக MP

x

மாநிலங்களவையில் பேசிய திமுக எம்.பி. ராஜேஷ்குமார், 2021-22 மத்திய பட்ஜெட்டில், சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட திட்டத்திற்காக 63 ஆயிரத்து 246 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும் என நிர்மலா சீதாராமன் அறிவித்தார். ஆனால் திட்டம் பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுக்காக கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக காத்திருப்பதாக சுட்டிக்காட்டினார். இதனால் திட்டத்திற்கான ஒட்டுமொத்த செலவையும் மாநில அரசே ஏற்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாக கூறினார். சென்னையில் மக்கள் தொகை தோராயமாக 1.2 கோடியாக உள்ளது என குறிப்பிட்டவர், சென்னையை போல் மக்கள் தொகை அடர்த்திக் கொண்ட டெல்லி, பெங்களூருவில் இருக்கும் மெட்ரோ இணைப்பு சென்னையில் இல்லை எனவும் சுட்டிக்காட்டினார். சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட திட்டத்திற்கான நிதியை விடுவிக்க கோரியவர், மத்திய அரசு அனைத்து மாநிலங்களையும் ஒரு தாய் பறவை போல சமமாக நடத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார்.


Next Story

மேலும் செய்திகள்