``செங்கோலை அகற்ற வேண்டும்..'' - ஓரணியில் திரண்ட எதிர்க்கட்சிகள்... அதிர்ந்த நாடாளுமன்றம்

x

நாடாளுமன்ற மக்களவையில் இருந்து செங்கோலை அகற்ற வேண்டும் என சமாஜ்வாடி எம்பி ஆர்.கே.செளத்ரி சபாநாயகர் ஓம்.பிர்லாவுக்கு கடிதம் எழுதியுள்ளார். முடியாட்சி அல்லது ஏகாதிபத்தியத்தின் அடையாளமாக செங்கோல் திகழ்கிறது எனவும் விமர்சித்து இருந்தார். புதிய நாடாளுமன்ற கட்டடம் திறக்கப்பட்டபோது, அரசு ஒரு பெரிய நாடகத்தை நடத்தியது என குறிப்பிட்ட காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர், அவரது யோசனை நல்லது என்றார். இது ஜனநாயக நாடு, செங்கோலை அகற்ற வேண்டும் என இந்தியா கூட்டணியை சேர்ந்த ராஷ்டீரிய ஜனதா தளம் கட்சியும் வலியுறுத்தியுள்ளது. செங்கோலை மக்கள் வந்து பார்க்கும் அருங்காட்சியகத்தில்தான் வைக்க வேண்டும் என லாலு பிரசாத் யாதவ் மகள் எம்.பி. மிசா பார்தி கூறியிருக்கிறார். செங்கோல் மன்னராட்சியின் அடையாளம், ஜனநாயக நாட்டில் அதற்கு எந்த பங்கும் இல்லை எனக் கூறிய திமுகவின் டி.கே.எஸ்.இளங்கோவன், சமாஜ்வாடி இதனை சொல்வதை நியாயமானதாகவே பார்க்கிறோம் என்றார்.


Next Story

மேலும் செய்திகள்