"நாடாளுமன்ற மரபுகள் கேலிக்கூத்தாக்கப் படுகின்றன" - காங்., பொது செயலாளர் குற்றச்சாட்டு

x

நாடாளுமன்ற மரபுகள் கேலிக்கூத்து ஆக்கப்படுவது ஆழ்ந்த வேதனை அளிப்பதாக, காங்கிரஸ் பொது செயலாளர் கே.சி.வேணுகோபால் மக்களவை சபாநாயகருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

மக்களவை சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டுள்ள ஓம் பிர்லா, எமர்ஜென்சி குறித்து மக்களவையில் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றினார். இது தொடர்பாக சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு, காங்கிரஸ் பொது செயலாளர் கே.சி.வேணுகோபால் எழுதியுள்ள கடிதத்தில், ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு கொண்டு வரப்பட்ட எமர்ஜென்சி குறித்து, சபாநாயகர் குறிப்பிட்டுப் பேசியது அதிர்ச்சி அளிப்பதாக தெரிவித்துள்ளார். மேலும், நாடாளுமன்ற வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத வகையில், இப்படி ஒரு அரசியல் குறிப்பு கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். புதிதாக தேர்வு செய்யப்பட்ட சபாநாயகரிடம் இருந்து, முதல் கடமையாக இப்படி ஒரு குறிப்பு வருவது ஆழ்ந்த கவலையை ஏற்படுத்தி உள்ளதாகவும் கே.சி.வேணுகோபால், தமது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்