``ரூ.24,000 கோடி..'' ஒன்று கூடிய I.N.D.I.A.... பரபரப்பை பற்ற வைத்த ராகுல்
சுகாதார மற்றும் ஆயுள் காப்பீட்டிற்கு ஜி.எஸ்.டி. வரியிலிருந்து முற்றிலுமாக விலக்கு அளிக்க வேண்டும் என மத்திய அரசை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.
நாடாளுமன்ற வளாகத்தில் சுகாதார, ஆயுள் காப்பீடு பிரீமியத்திற்கு 18 % ஜிஎஸ்டி வரிவிதிப்பதற்கு எதிரான இந்தியா கூட்டணி ஆர்ப்பாட்டத்தில் ராகுல் காந்தி கலந்துக் கொண்டார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், ஒருவரது வாழ்க்கையில் எதிர்பாராமல் ஏற்படும் சுகாதார நெருக்கடியில் யார் முன்பும் தலைகுனிய வேண்டாம் என்பதை உறுதி செய்ய, ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு பைசாவையும் சேர்த்து மருத்துவ காப்பீட்டு பிரீமியம் செலுத்துகிறார்கள் என குறிப்பிட்டுள்ளார். இப்படி செலுத்தும் கோடிக்கணக்கான சாமானியர்களிடமிருந்து மோடி அரசு 24 ஆயிரம் கோடி ரூபாயை வரியாக வசூலித்துள்ளதாக குற்றம் சாட்டியிருக்கும் ராகுல் காந்தி, ஒவ்வொரு பேரழிவிற்கு முன்பும் வரி வாய்ப்பை எதிர்நோக்கி இருப்பது பாஜக அரசின் உணர்வற்ற சிந்தனைக்கு சான்று என விமர்சித்துள்ளார். இதனை இந்தியா கூட்டணி எதிர்ப்பதாக குறியிருக்கும் ராகுல் காந்தி, சுகாதார மற்றும் ஆயுள் காப்பீடுகளுக்கு ஜிஎஸ்டி வரியிலிருந்து முற்றிலும் விலக்கு அழிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.