"தமிழகம் முழுவதும்.." அமைச்சர் சொன்ன நல்ல நியூஸ் | Palanivel Thiaga Rajan | Thanthitv

x

சட்டப்பேரவை கேள்வி நேரத்தில் பேசிய செய்யூர் எம்எல்ஏ பனையூர் பாபு, கேபிள் டிவி நலவாரியம் அமைத்ததற்காக அரசுக்கு நன்றி கூறினார். தொடர்ந்து பேசிய அவர், டான்ஃபினெட் ஒயர் பராமரிப்பு பணிக்கு கேபிள் டி.வி ஆப்பரேட்டர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். இதற்கு பதிலளித்த அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், ஆட்சி மாற்றத்தின் போது, தமிழ்நாடு அரசு கேபிள் டிவி 200 கோடி ரூபாய் திவாலான நிறுவனமாக தான் கொடுக்கப்பட்டதாக குற்றம்சாட்டினார். தமிழ்நாடு அரசு கேபிள் டிவி மீண்டும் உச்சத்தை நோக்கி பயனடையும் வகையில் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்