ஓபிஎஸ்-ன் மொத்த சொத்து, கடன் எவ்வளவு தெரியுமா? - முழு விவரமும் வெளியானது
முன்னாள் முதல்வரும் ராமநாதபுரம் நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளருமான ஓபிஎஸ் 9 கோடியே 79 லட்சத்து 60 ஆயிரத்து 377 ரூபாய் மதிப்பிலான சொத்துகள் இருப்பதாக தேர்தல் பிரமாண பத்திரத்தில் தெரிவித்துள்ளார். 1 கோடியே 11 லட்சத்து 33 ஆயிரத்து 138 ரூபாய் மதிப்பிலான அசையும் சொத்துகள், 7 கோடியே 80 லட்சத்து 99 ஆயிரத்து 707 ரூபாய் மதிப்பிலான அசையா சொத்துகள், மறைந்த தனது மனைவி பெயரில் 10 லட்சத்து 17 ஆயிரத்து 694 ரூபாய் மதிப்பிலான அசையும் சொத்துகள் மற்றும் 76 லட்சத்து 99 ஆயிரத்து 838 ரூபாய் மதிப்பிலான அசையா சொத்துகள் இருப்பதாக தெரிவித்துள்ளார். அத்துடன் 1 கோடியே 52 லட்சத்து 85 ஆயிரத்து 226 ரூபாய் கடன் இருப்பதாகவும், தன் மீது 5 குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
Next Story