"ஒரே நாடு.. ஒரே தேர்தல்.." - வைகோ கடும் கண்டனம் | VAIKO

x

மத்திய அரசின் ஒரே நாடு- ஒரே தேர்தல் திட்டத்திற்கு ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 2014ம் ஆண்டு மோடி தலைமையில் பா.ஜ.க ஆட்சி பொறுப்பேற்றதுமுதல், ஒரே நாடு, ஒரே மதம், ஒரே மொழி என, எல்லாவற்றையும் ஒரு குடையின் கீழ் கொண்டு வந்து, அதிகாரங்களை குவித்து வைத்து எதேச்சதிகார ஆட்சி நடத்துவதாக குற்றம் சாட்டியுள்ளார். இதன் உச்சகட்டமாக ஒரே நாடு; ஒரே தேர்தல் திட்டத்திற்கு குழுவை அறிவித்து, குடியரசு தலைவர் பதவியில் இருந்தவரை மரபுகளை மீறி தலைவராக நியமித்த செயல் ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல என குறிப்பிட்டுள்ளார். மக்களாட்சி கோட்பாடுகளின் ஆணிவேர்களை அறுத்து எரிந்து நாடாளுமன்ற ஜனநாயகத்தை குழி தோண்டி புதைத்து, சர்வாதிகார இந்துராஷ்டரத்தைக் கட்டமைக்கத் துடிக்கும் ஆர்.எஸ்.எஸ் - பா.ஜ.கவின் திட்டத்தை ஜனநாயக முற்போக்கு சக்திகள் கரம் கோர்த்து முறியடிக்க வேண்டும் என்றும் வைகோ கேட்டுக்கொண்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்