22 ரூபாய் உயர்வு.. பெண்கள், மக்கள் தலையில் இடியை இறக்கிய செய்தி

x

சமையல் எண்ணெய் மீதான இறக்குமதி வரியை

20 சதவிதமாக மத்திய அரசு சமீபத்தில் உயர்த்தியது.

இதனைத் தொடர்ந்து கடந்த வாரம் எண்ணை தொழில்துறை அமைப்பினருடன் ஆலோசனை நடத்திய மத்திய அரசு எதிர்வரும் பண்டிகையை காலங்களில் எண்ணெய் விலையை உயர்த்த வேண்டாம் எனவும் எண்ணெய் விலையை நிலையாக வைத்திருக்குமாறு அறிவுறுத்தலை வழங்கியது. மத்திய அரசின் அறிவுறுத்தலையும் மீறி பல்வேறு சமையல் எண்ணெய்களின் விலை லிட்டர் ஒன்றுக்கு சராசரியாக ரூ.8 முதல் 22 வரை உயர்த்தப்பட்டுள்ளது.

கடுகு எண்ணெயின் விலை141 ரூபாயில் இருந்து

152 ரூபாயா உயர்ந்துள்ளது. அதேபோல் பாமாயில் விலை 100 ரூபாயில் இருந்து 122 ரூபாயாக உயர்ந்துள்ளது. சோயாபீன்ஸ் மற்றும் சூரியகாந்தி எண்ணையின் விலையும் லிட்டருக்கு 10 ரூபாய் உயர்ந்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்