24 ஆண்டுகள் ஒடிசாவை கட்டி ஆளும் பட்நாயக் - ஆலமரத்தை சாய்க்க பாஜகவின் மெகா ஸ்கெட்ச்
24 ஆண்டுகள் ஒடிசாவை கட்டி ஆளும் பட்நாயக் - ஆலமரத்தை சாய்க்க பாஜகவின் மெகா ஸ்கெட்ச்
மோடியோடு மேடை ஏறியும் தலைகீழான அரசியல்
ஒத்தைக்கு ஒத்தையாக மோத ரெடியான BJP
2000ஆம் ஆண்டு முதல் ஒடிசாவில் நவீன் பட்நாயக்
தலைமையில் பிஜு ஜனதா தளம், தொடர்ந்து 24 ஆண்டுகளாக ஆட்சி செய்து வருகிறது.
1998 முதல் 2009 வரை பாஜக கூட்டணியில் பிஜு ஜனதா தளம் இருந்தது. இந்த காலகட்டத்தில் இந்த கூட்டணி மூன்று மக்களவை தேர்தலிலும், இரண்டு சட்டமன்ற தேர்தலிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றன.
2008-ல் ஒடிசாவில் கிருஸ்துவ பழங்குடியினர் மீது
இந்துத்துவ அமைப்புகள் நடத்திய வன்முறை தாக்குதல்களை தொடர்ந்து, பாஜக கூட்டணியில்
இருந்து பிஜு ஜனதா தளம் வெளியேறியது.
ஆனால், கடந்த பத்தாண்டுகளாக, நாடாளுமன்றத்தில் பாஜக கொண்டு வந்த மசோதாகளுக்கு ஆதரவாக வாக்களித்து வந்தது.
இந்நிலையில் 2024 தேர்தலில் மீண்டும் கூட்டணி அமைக்க இரண்டு கட்சிகளும் பேச்சு வார்த்தை நடத்தின. மக்களவை தேர்தலுடன், ஒடிசா சட்டமன்றத்திற்கும் தேர்தலும் நடை பெற உள்ளது.
இந்நிலியில், கடந்த பிப்ரவரியில் இரண்டு முறை ஒடிசா சென்ற பிரதமர் மோடி பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் இரண்டு முறை மோடியுடன் மேடையை பகிர்ந்து கொண்டார்.
இரு கட்சிகளுக்கு இடையே, தொகுதி பங்கீடு சுமூகமாக நடந்துவருவதாகவும் விரைவில் கூட்டணி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று செய்திகள் வெளியாகிவந்தன.
பிஜு ஜனதா தளத்துடன் கூட்டணி பற்றி இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்று கடந்த சில தினங்களுக்கு முன் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியிருந்தார்.
இந்நிலையில், நேற்று(22ம் தேதி) ஒடிசா மாநில பாஜக தலைவர் மன்மோகன் சமல், பிஜு ஜனதா தளத்துடன் கூட்டணி இல்லை என்று எக்ஸ் தளத்தின் மூலம் அறிவித்துள்ளார்.
மத்திய அரசின் பல்வேறு நலத் திட்டங்கள் ஒடிசா மக்களை சென்றடையவில்லை என்று கூறிய மன்மோகன் சமல், இதற்கு நவீன் பட்நாயக் அரசு தான் காரணம் என்று குற்றம் சாட்டியுள்ளார்.
ஒடிசா மக்களின் விருப்பங்களை நிறைவேற்ற, 21 மக்களவை தொகுதிகள் மற்றும் 147 சட்டமன்ற தொகுதிகளிலும் பாஜக தனித்து போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளார்.