"ஃபார்முலா 4 ரேஸ் இப்போ அவசியமா?.." - சீமான் சரமாரி கேள்வி
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், சென்னை அண்ணா சாலையில் வரும் 31-ம் தேதி ஃபார்முலா4 கார் பந்தயம் நடத்த திமுக அரசு திட்டமிட்டுள்ளது கண்டனத்திற்குரியது என தெரிவித்துள்ளார். அரசின் நிதி நிலை மோசமாக உள்ள நிலையில், ஆடம்பர கார் பந்தயம் தேவைதானா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஏற்கனவே சென்னையில், ஒலிம்பியாட் சதுரங்கப் போட்டிகளை நடத்தி, திமுக என்ன என்றும், அதனால் தமிழ்நாட்டுக்கும் ஏற்பட்ட ஒரு நன்மையைச் சொல்ல முடியுமா? என்றும் அவர் வினவியுள்ளார். மேலும், அப்படியே நடத்தினாலும், இருக்காட்டுக்கோட்டை, சோழவரத்தில் உள்ள அதற்கான பந்தய திடலில் நடத்தாமல், அண்ணா சாலையில் நடத்த வேண்டிய அவசியம் என்ன என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். ஒலிம்பிக் போட்டிகளில் ஒரே ஒரு பதக்கம் வெல்லும் அளவிற்குத் தகுதியான ஒரு வீரரைக்கூட தமிழ்நாட்டிலிருந்து உருவாக்கத் திறனற்ற அரசு, கார் பந்தயம் நடத்துவதால் விளையாட்டுத்துறை மேம்பட்டு விடுமா எனவும்,
மாவட்டந்தோறும் ஏழைக் குழந்தைகளின் விளையாட்டு திறனறிந்து பயிற்சியளிக்கச் செலவு செய்யாமல், கையேந்தி கார் பந்தயம் நடத்துவதால் யாருக்கு என்ன பயன் என்றும் சீமான் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார்.