நிதிஷின் ஸ்டாண்ட்.. பறந்த கடிதம்... `க்'வைத்த JDU | Nitish Kuma | Thanthitv
பா.ஜ.க கூட்டணியில் முக்கிய கட்சியான ஐக்கிய ஜனதா தளம், அக்னிவீர் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய ஏற்கனவே கோரிக்கை விடுத்துள்ளது. எனினும், ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்திற்கும், பொது சிவில் சட்டத்திற்கும் ஐக்கிய ஜனதா தளம் ஆதரவு தெரிவித்துள்ளது. டெல்லியில் நிதீஷ்குமார் உடனான ஆலோசனைக்குப்பின் செய்தியாளர்களிடம் பேசிய ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவர் கே.சி. தியாகி இதனை உறுதி செய்தார். பொது சிவில் சட்டத்திற்கு எதிரானவர்கள் அல்ல என்றும், சட்ட ஆணையத் தலைவருக்கு முதல்வர் நிதீஷ் குமார் கடிதம் எழுதியுள்ளதாகவும் குறிப்பிட்டார். பா.ஜ.கவுக்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்கியுள்ளதாகவும் கே.சி.தியாகி தெரிவித்தார்.
Next Story