எஸ்கேப்பான நிதிஷ்.. ஆட்டம் காணுகிறதா NDA..? - இந்தியா கூட்டணிக்கு சிக்னல்..?

x

மத்திய பட்ஜெட்டில் பீகாருக்கு சிறப்பு அறிவிப்புகள் வெளியிடப்பட்டது தேசிய அளவில் கவனம் பெற்றது. மத்திய பட்ஜெட் வெளியானதை தொடர்ந்து பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம் நடைபெறுகிறது. கூட்டத்தை இந்தியா கூட்டணியில் பெரும்பாலான முதல்வர்கள் புறக்கணித்த வேளையில், பாஜக கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் பீகார் முதல்வர் நிதிஷ் குமாரும் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. கூட்டத்தில் நிதிஷ் குமார் கலந்துக் கொள்ளாதது குறித்தோ, புறக்கணிப்பதாகவோ எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. அவர் கூட்டத்தில் பங்கேற்காதது உறுதி செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் கூட்டத்தில் பீகார் துணை முதல்வர்கள் சாம்ராட் சௌத்ரி மற்றும் விஜயகுமார் சின்ஹா ஆகியோர் பங்கேற்றுள்ளனர். ஏற்கனவே பாஜகவின் கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி கூட்டத்தில் பங்கேற்காத நிலையில், நிதிஷ் குமாரும் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்