மருத்துவ காப்பீட்டுக்கு GST.. எழுந்த கேள்விக்கு நிர்மலா சீதாராமன் கொடுத்த பதில்
மருத்துவ காப்பீடு பிரிமீயம் மீது 18 சதவீத ஜி.எஸ்.டி வரியை ரத்து செய்ய வேண்டும் என்ற எதிர்கட்சிகளின் கோரிக்கைக்கு
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதில் அளித்துள்ளார். மக்களவையில் நேற்று பதில் அளித்த நிர்மலா சீதாராமன், காப்பீடு பிரிமியம் மீதான 18 சதவீத ஜி.எஸ்.டி. வரி வசூலில் 75 சதவீதம் மாநிலங்களுக்கு செல்வதாக குறிப்பிட்டார். எதிர்கட்சிகள் ஆளும் மாநிலங்களின் நிதியமைச்சர்கள், இந்த 18 சதவீத வரி விதிப்பை ரத்து செய்யும்ப,டி ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில் பரிந்துரை செய்வதே முறையாகும் என்றும் கூறினார்.
Next Story