ஆவேசமாக முழங்கிய நபர் - சட்டென்று மேடையேற்றிய நிர்மலா சீதாராமன் - வங்கி கடிதத்தால் அம்பலமான உண்மை
கோவையில் நடைபெற்ற வங்கி கடன் வழங்கும் நிகழ்ச்சியில், தனக்கு வங்கி கடன் அளிக்கவில்லை என ஒருவர், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் முறையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
vovt
கோவை கொடிசியா வளாகத்தில், சுய தொழில் செய்வோர், சிறு குறு தொழில் முனைவோர் உள்ளிட்டோருக்கு, வங்கி கடன் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்று, 3 ஆயிரத்து 479 கோடி ரூபாய் மதிப்பிலான கடன் உதவிகளை வழங்கினார். நிகழ்ச்சியின்போது தொழில்முனைவரான சதீஷ்குமார் என்பவர், தனக்கு வங்கி கடன் வழங்கப்படவில்லை எனவும், கடனுக்கான விண்ணப்பித்து பல மாதங்களாகியும் உரிய பதில் அளிக்கப்படவில்லை எனவும் கூறி, நிர்மலா சீதாராமனின் கவனத்தை ஈர்க்க முயன்றார். தொடர்ந்து ஊடகங்களிடம் பேச முயன்ற அவரை, வங்கி அதிகாரிகளும், பாஜகவினரும் தடுக்க முயன்றனர். இதனால் ஏற்பட்ட சலசலப்பை கண்ட நிர்மலா சீதாராமன், சதீஷ்குமாரை மேடைக்கு அழைத்து, அவரது குற்றச்சாட்டை கேட்டறிந்தார். பின்னர் இதுதொடர்பாக விசாரிக்கப்படுமென உறுதியளித்தார். இந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.