சிறுவனின் உடலில் காட்டிய அறிகுறி.. மொத்த மாநிலமும் அலர்ட் மோடில் - உஷாராகும் தமிழக, கர்நாடக எல்லைகள்

x

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல், குஜராத்தில் சண்டிபுரா வரிசையில் கேரளாவில் நிஃபா வைரஸ் அச்சுறுத்தல் தொடங்கியுள்ளது. இதுகுறித்து விரிவாக பார்க்கலாம் இந்த செய்தி தொகுப்பில்...

பருவமழை தொடங்கிய வேகத்தில், வைரஸ்களும், காய்ச்சல்களும் அச்சுறுத்த தொடங்கி விட்டன..

அந்த வகையில் தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து பயமுறுத்தி வர.. கேரளாவில் பல காய்ச்சல்கள் படையெடுக்க தொடங்கி விட்டன...

அந்த வகையில் அண்மையில், கேரளாவில் மூளையை திண்ணும் அமீபா வைரஸ் வேகமாக பரவி வந்தது. கிட்டத்தட்ட 4 பேருக்கு இந்த பாதிப்பு ஏற்பட்ட நிலையில், சுகாதாரத்துறை சார்பில் நோய் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன..

இந்நிலையில் ஜிகா வைரஸும் உடன் சேர்ந்து அச்சுறுத்தலை தொடங்கியது... இதுவரை கிட்டத்தட்ட 14 பேர் ஜிகா வைரஸ்-ஆல் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், கொசுக்கள் உற்பத்தியை தடுக்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன...

இதனுடன் தற்போது இணைந்துள்ளது நிஃபா வைரஸ். கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு நிஃபா வைரஸ் ஏற்பட்டிருக்க வாய்ப்பிருப்பதாக கூறப்பட்ட நிலையில், பரிசோதனை முடிவில் நிஃபா வைரஸ் தொற்று உறுதியாகவில்லை..

இருப்பினும் விலங்குகளிடமிருந்து நிஃபா வைரஸ் பரவாமல் தடுக்க, உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள கேரள சுகாதாரத்துறை திட்டமிட்டு வருகிறது..

இதனால் கேரளாவில் உயிரிழந்த வீட்டு மற்றும் காட்டு விலங்குகள் குறித்து உரிய தகவல்கள் அளிக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.

மலப்புரம் மாவட்டத்தில் அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் உயர்நிலைக் குழுவுடன் ஆலோசனை நடத்தியுள்ளார்.

சுகாதாரத்துறை கூடுதல் தலைமைச் செயலர் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் பங்கேற்ற இந்த கூட்டத்தில் மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் வைரஸ் பரவலை தடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டுள்ளது.

மலப்புரம் மாவட்டத்தில் நிஃபா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த அரசு குழுக்களை அமைத்து கண்காணித்து வருவது குறிப்பிடத்தக்கது.

இதனால் கேரளா முழுவதும் அலர்ட் மோடில் உள்ள நிலையில், கேரள எல்லைப்பகுதிகளை ஒட்டியுள்ள தமிழகம் மற்றும் கர்நாடக பகுதிகளிலும் உஷார் நிலையில் உள்ளனர்..

மேலும், பொதுமக்கள் குடிநீரை காய்ச்சி குடிக்க வேண்டும் உள்ளிட்ட அடிப்படை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ள சுகாதாரத்துறை காய்ச்சல் அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவமனையை அணுக வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்