நீலகிரி அதிமுக கவுன்சிலர்கள் கொடுத்த எச்சரிக்கை
நீலகிரி மாவட்டம் உதகையில், அ.தி.மு.க கவுன்சிலர்கள் போட்டி நகர்மன்ற கூட்டத்தை நடத்தினார்கள். அதிமுக வார்டு உறுப்பினர்கள் ஏழு பேர் கருப்பு உடை அணிந்து வந்து நகராட்சி கூட்டத்தை புறக்கணித்தனர். பின்பு வெளிநடப்பு செய்த அவர்கள் நகராட்சி அலுவலக வளாகத்தில் திடீரென மேசைகளை அமைத்து போட்டி நகர்மன்ற கூட்டம் நடத்தினார்கள். விரைவில் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து மிகப்பெரிய அளவிலான போராட்டம் நடத்தப்படும் என அ.தி.மு.க கவுன்சிலர்கள் எச்சரித்துள்ளனர்.
Next Story