தீப்பிடிக்கும் நீட் விவகாரம்.. ராகுல் சொன்னதும் தலையசைத்த சபாநாயகர் ஓம் பிர்லா

x

நீட் பிரச்சனையில் தங்களது எதிர்ப்பை பதிவு செய்யும் விதத்தில், மக்களவையில் இருந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தனர். மக்களவை இன்று தொடங்கிய நிலையில், ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த ஈரான் அதிபர் இப்ரஹீம் ரைஸி உள்ளிட்டோரின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து பேசிய சபாநாயகர் ஓம் பிர்லா, நீட் தேர்வு தொடர்பான ஒத்திவைப்பு நோட்டீஸ்களை அனுமதிக்க முடியாது என்றும், குடியரசுத் தலைவர் உரை மீதான விவாதத்தில் அதுகுறித்து பேசலாம் என்றும் தெரிவித்தார். அப்போது குறுக்கிட்டு பேசிய எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, நீட் பிரச்சனை நாடாளுமன்றத்திற்கு முக்கியமானது என்ற செய்தியை நாட்டில் உள்ள மாணவர்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்றும், ஒருநாள் முழுவதும் நீட் பிரச்சனை தொடர்பாக விவாதம் நடத்த வேண்டும் என வலியுறுத்தினார். அதற்கு இதுகுறித்து ஆய்வு செய்வதாக சபாநாயகர் ஓம் பிர்லா பதிலளித்தார்.


Next Story

மேலும் செய்திகள்