முடிவெடுத்த நிதிஷ், நாயுடு.. NDAக்கு திமுக வைக்கப்போகும் செக்..

x

நீட் தேர்வை ரத்து செய்ய சந்திரபாபு நாயுடுவும், நிதிஷ்குமாரும் வலியுறுத்த வேண்டும் என உட்பட 6 தீர்மானங்கள் திமுக எம்பிக்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளன.

முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், திமுக சார்பில் வெற்றி பெற்ற 21 எம்பிக்கள், மாநிலங்களவை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

அப்போது, வெற்றிக்கு வழிநடத்தியதாக முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தல் உட்பட 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கருணாநிதி நூற்றாண்டு விழா, மக்கள் மற்றும் முதல்வருக்கு நன்றி தெரிவிக்க, கோவையில் ஜூன் 14-ஆம் தேதி முப்பெரும் விழா நடத்த தீர்மானிக்கப்பட்டது.

நாடாளுமன்ற வளாகத்தில் அகற்றப்பட்ட தேசத் தலைவர்கள் சிலைகளை அதே இடத்தில் வைக்க வேண்டும்.

மாநில உரிமைகளுக்காக நாடாளுமன்றத்தில் அயராது குரல் கொடுக்க வேண்டும்.

நீட் தேர்வுக்கு முற்றுப்புள்ளி வைக்க, தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் சந்திரபாபு நாயுடு மற்றும் நிதிஷ் குமார் வலியுறுத்த வேண்டும்.

நாடாளுமன்றத்தை பாதுகாக்க CISF வீரர்களை நியமிக்கும் முடிவை திரும்ப‌ப் பெற்று, நாடாளுமன்ற பாதுகாப்பு படையினரையே நியமிக்க வேண்டும் என திமுக கூட்டத்தில் தீரமானம் நிறைவேற்றப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்