களத்தில் தெறிக்கவிட்ட நாம் தமிழர் கட்சி.. சைலன்ட்டா அடிச்ச சிக்ஸர்.. "நா.த.க - 19" 3வது இடத்தில் இருக்கும் சீமான்
முதல் மற்றும் இரண்டாம் கட்ட தேர்தலில் மொத்தம் இரண்டாயிரத்து 823 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
இவர்களில் பெண் வேட்பாளர்கள் எண்ணிக்கை 235ஆக, இருந்தது.
பெண் வேட்பாளர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பது, பெண்களை முன்னிறுத்துவதில் அரசியல் கட்சிகளின் தயக்கத்தை காட்டுவதாக அரசியல் ஆர்வலர்கள் கூறியுள்ளனர்.
முதல் கட்ட தேர்தலில் போட்டியிட்ட 135 பெண் வேட்பாளர்களில் 76 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இரண்டாம் கட்ட தேர்தலில் கேரளாவில் அதிகபட்சமாக 24 பெண் வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
இரண்டு கட்ட தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி சார்பில் 44 பெண் வேட்பாளர்களும், பாஜக சார்பில் 69 பெண் வேட்பாளர்களும் போட்டியிட்டனர்.
அரசியல் கட்சிகளில், நாம் தமிழர் கட்சி மட்டும், 50 சதவீத இடங்களை பெண் வேட்பாளர்களுக்கு ஒதுக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் நாம் தமிழர் கட்சி சார்பாக 19 பெண் வேட்பாளர்கள் களம் இறங்கியுள்ளனர்.