கன்னியாகுமரி முதல் சென்னை வரை முத்தமிழ் தேர் பவனி - 4 அமைச்சர்கள் பங்கேற்பு

x

கன்னியாகுமரி முதல் சென்னை வரையிலான

கலைஞர் நூற்றாண்டு முத்தமிழ் தேர் பவனியை 4 அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர். மறைந்த தலைவர் கருணாநிதியின் நூற்றாண்டை ஒட்டி, எழுத்தாளர்- கலைஞர் குழுவின், கலைஞர் நூற்றாண்டு முத்தமிழ் தேர் பவனி கன்னியாகுமரியில் காந்தி மண்டபம் முன்பு இருந்து தொடங்கியது.

இதனை அமைச்சர்கள் பெரிய கருப்பன், மனோ தங்கராஜ், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, கயல்விழி செல்வராஜ் ஆகியோர் கொடி அசைத்து துவக்கி வைத்தனர். பேனா வடிவில் அமைக்கப்பட்ட இந்த வாகனம், கன்னியாகுமரியில் இருந்து புறப்பட்டு நெல்லை, விருதுநகர், மதுரை, உட்பட 38 மாவட்டங்களில் உள்ள கிராமங்களுக்கும் சென்று அடுத்த மாதம் ஐந்தாம் தேதி சென்னை சென்றடைகிறது.


Next Story

மேலும் செய்திகள்