"அரிசிக்கு பல விதமான ஜி.எஸ்.டி " - அமைச்சர் தகவல்
அரிசிக்கு பல வகையான ஜி.எஸ்.டி விதிக்க கூடாது என்பதை ஜிஎஸ்டி கவுன்சிலில் மீண்டும் முன்வைப்போம் என்று வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி தெரிவித்தார். கோயம்புத்தூரில் வணிகவரி நிலுவைகளுக்கான சமாதானத் திட்டம் குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. அமைச்சர் பி.மூர்த்தி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், கோவை, ஈரோடு, சேலம், ஓசூர் கோட்டங்களை சேர்ந்த வணிகர் சங்க நிர்வாகிகளும், அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த அலுவலர்களும் கலந்து கொண்டனர். கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த அமைச்சர் மூர்த்தி, அரிசிக்கு பலவகையான வரி விதிப்பது குறித்து ஜிஎஸ்டி கவுன்சிலில் கோரிக்கை விடுக்கப்படும் என்று கூறினார்.
Next Story