ஜாமின் கேட்ட எம்.ஆர். விஜயபாஸ்கருக்கு கோர்ட் போட்ட ஆர்டர்

x

கரூரில் பிரகாஷ் என்பவருக்கு சொந்தமான 100 கோடி மதிப்பிலான 22 ஏக்கர் நிலத்தை, போலி ஆவணங்கள் மூலம் வாங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த வழக்கில் கேரள மாநிலம் திருச்சூரில் வைத்து முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கரை, சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்ட எம்.ஆர்.விஜயபாஸ்கர், ஜாமின் கேட்டு கரூர் குற்றவியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இதனை விசாரித்த நீதிமன்றம், அவருக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி உத்தரவிட்டது. தினமும் சிபிசிஐடி அலுவலகத்தில் காலை, மாலை என இரண்டு வேளைகளும், வாங்கல் காவல்நிலையத்தில் ஒரு வேளையும் கையெழுத்திட வேண்டும் என அவருக்கு, நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்