M. R. விஜயபாஸ்கருக்கு அடுத்த அடி.. நீதிபதி அதிரடி உத்தரவு

x

கரூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட முன்னாள் அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கருக்கு வரும் 31-ம் தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது. சொத்து மோசடி வழக்கில் சிபிசிஐடி போலீசாரால் கைது செய்யப்பட்ட எம்.ஆர். விஜயபாஸ்கர், திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். ஏற்கனவே, அவர் மீது, பிரகாஷ் என்பவர் அளித்த புகாரின் பேரில் கொலை மிரட்டல், ஆள் கடத்தல் உள்ளிட்ட ஆறு பிரிவுகளின் கீழ் கரூர் மாவட்டம், வாங்கல் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்திருந்தனர். இந்த வழக்கில், நேற்று எம்ஆர் விஜயபாஸ்கரை கைது செய்த போலீசார், இன்று, கரூர் விரைவு நீதிமன்ற நீதிபதி மகேஷ் முன்பு ஆஜர்படுத்தினர். அவருக்கு, வரும் 31-ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதித்து நீதிபதி உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீண்டும் திருச்சி மத்திய சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.


Next Story

மேலும் செய்திகள்