"கைகட்டி வேடிக்கை பார்ப்பதா..?" கொதித்தெழுந்த துரை வைகோ MP | Durai Vaiko | Thanthitv
இலங்கை கடற்படையினரின் தொடர் தாக்குதலுக்கு மதிமுக தலைமை நிலையச் செயலாளர் துரை வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில், மத்திய பாஜக அரசு தமிழக மீனவர்கள் மீது நடத்தப்படும் தொடர் தாக்குதல்களையும், கைது செய்யப்படுவதையும் வேடிக்கை பார்ப்பது வேதனை தருவதாக தெரிவித்துள்ளார். கடந்த 30 ஆண்டுகளாக இலங்கை கடற்படையினர் அத்துமீறி தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி படுகொலை செய்வதையும், படகுகளை பறிமுதல் செய்வதையும் கண்டும் காணாமல் மத்திய அரசு அலட்சியப் போக்குடன் இருப்பதை கடந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் வைகோ மாநிலங்களவையில் எடுத்துரைத்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். இலங்கை கடற்படையினரின் இத்தகைய அட்டூழியங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க ஒன்றிய அரசு உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தான் வலியுறுத்துவதாகவும் தெரிவித்துள்ளார்.