3ம் முறையாக மோடி ஆட்சிக்கு வந்ததும் - வெளியான பரபரப்பு ரிப்போர்ட்

x

2004 மே மாதத்தில், மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் அரசு பதவியேற்ற பின், அடுத்த ஒரு மாதத்தில் பங்கு சந்தை 4.6 சதவீதம் சரிந்தது. ஆனால் அடுத்த ஆறு மாதங்களில் 20.2 சதவீதம் அதிகரித்தது. 2009 மே மாதத்தில், இரண்டாம் முறையாக மன்மோகன் சிங் அரசு பதவியேற்ற பின், அடுத்த ஒரு மாதத்தில் பங்கு சந்தை 3.2 சதவீதம் அதிகரித்தது. ஆறு மாதங்களில் 23.7 சதவீதம் உயர்ந்தது குறிப்பிடத்தக்கது. 2014இல் முதல் முறையாக மோடி அரசு பதவியேற்ற பின், அடுத்த ஒரு மாதத்தில் பங்கு சந்தை 1.4 சதவீதம் அதிகரித்து, ஆறு மாதங்களில் 14.8 சதவீதம் அதிகரித்தது. ஆனால் 2019இல், இரண்டாம் முறையாக மோடி அரசு பதவியேற்ற பின், அடுத்த ஒரு மாதத்தில் 0.4 சதவீதம் சரிந்த பங்கு சந்தை, அடுத்த ஆறு மாதங்களில் 2.4 சதவீதம் உயர்ந்தது. மூன்றாம் முறையாக நரேந்திர மோடி பிரதமராகியுள்ள நிலையில், பங்கு சந்தை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்