"மோடி கேபினேட்யில் வாரிசு அரசியல்.." 20 மத்திய அமைச்சர்களை சுட்டிக்காட்டி லெப்ட் ரைட் வாங்கிய ராகுல்

x

தலைமுறை தலைமுறையாக போராட்டம், சேவை மற்றும் தியாகங்களை செய்து வருபவர்களை 'நெப்போட்டிசம்' அதாவது வாரிசு அரசியல் செய்பவர்கள் என விமர்சித்து வந்தவர்கள் தற்போது ஆட்சி அதிகாரத்தை தங்கள் அரசின் குடும்பத்திற்கு வழங்கி இருப்பதாக ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். கூடவே முன்னாள் தலைவர்களின் மகன்கள், மகள்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கு புதிய அமைச்சரவையில் இடம் கொடுக்கப் பட்டிருப்பதாக கூறி, புதிய அமைச்சரவையில் இடம் பிடித்த 20 பேர் கொண்ட பட்டியலையும் வெளியிட்டு அவர் விமர்சித்துள்ளார். அதில் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மகன் எச்.டி.குமாரசாமி, முன்னாள் மத்திய அமைச்சர் மாதவ் ராவின் மகன் ஜோதிராதித்ய சிந்தியா, ராம்விலாஸ் பாஸ்வானின் மகன் சிராக் பாஸ்வான், முன்னாள் பிரதமர் சவுத்ரி சரண் சிங்கின் பேரன் ஜெயந்த் சவுத்ரி உள்ளிட்ட 20 பேருக்கு மத்திய அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டிருப்பதாக ராகுல் காந்தி சுட்டி காட்டியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்