பிரதமரின் 300 யூனிட் இலவச மின்சாரம்.. யார் யாருக்கு கிடைக்கும்?
சூரிய மின்சக்தி திட்டம், வேலைவாய்ப்பு தொடர்பாக மத்திய பட்ஜெட்டில் முக்கிய அறிவிப்புகள் இடம்பெற்றன.
பிரதமரின் சூரிய மின்சக்தி திட்டத்தின் கீழ் ஒருகோடி வீடுகளுக்கு மாதம் 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும். கூடுதலாக சிறிய வகை அணுமின் நிலையங்கள் அமைப்பது குறித்து ஆலோசிக்கப்படும். உள்நாட்டில் உள்ள தாதுக்கள், கனிம வளங்களை மறுசுழற்சி செய்யும் வகையில் புதிய திட்டம் செயல்படுத்தப்படு என மத்திய பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொழிலாளர் சீர்திருத்த நடவடிக்கைகளுக்காக இ - ஸ்ரம் இணையதளம் மேம்படுத்தப்படும். வாராக்கடனை வசூலிப்பதற்கான சீர்திருத்த நடவடிக்கைகள் வலுப்படுத்தப்படும். திவால் நடைமுறைகள் தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வு காண கூடுதல் தீர்ப்பாயங்கள் அமைக்கப்படும் என பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் 12 புதிய தொழில் பூங்காக்கள் ஏற்படுத்தப்படும், 1000 தொழில்துறை பயிற்சி நிறுவனங்கள் ஏற்படுத்தப்படும். ஐந்தாண்டுகளில் ஒருகோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் 500 தொழில் பழகுநர் மையங்கள் உருவாக்கப்படும். கைவினைஞர்கள் மற்றும் கலைஞர்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் திட்டங்கள் செயல்படுத்தப்படும். பழங்குடியின மக்களுக்காக ரூ.5 கோடியில் சிறப்பு திட்டங்கள் கொண்டு வரப்படும்.