"வள்ளுவர் சிலை கலைஞரின் பெயரை தான் உலகிற்கு சொல்கிறது" - திருமாவளவன் | Modi
விவேகானந்தர் மண்டபத்தில் பிரதமர், மோடி அமர்ந்த போதும் சுற்றி சுற்றி புகைப்படம் எடுத்த போதும், வள்ளுவர் சிலை தான் தெரிகிறது என்றும், அச்சிலை கலைஞரின் பெயரைதான் உலகிற்கு சொல்கிறது என்று, விடுதலைச்சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். சென்னையில்,
தெற்கு மாவட்ட திமுக சார்பில் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா வாழ்த்தரங்கம் நடைபெற்றது.
வேளச்சேரி குருநானக் கல்லூரியில் நடைபெற்ற விழாவில், அமைச்சர் மா. சுப்ரமணியன், கி.வீரமணி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை,முத்தரசன், கே.பாலகிருஷ்ணன், தொல்.திருமாவளவன், ஜவாஹிருல்லா உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர். விழாவில் பேசிய திருமாவளவன், விவேகானந்தர் அமர்ந்த இடத்தில் அமர்ந்து அகில இந்திய அரசியலை நகர்த்த நினைப்பதாக விமர்சித்தார்.
Next Story