குஜராத்துக்கு ரூ.8000 கோடி, ஒடிசாவுக்கு ரூ.3,800 கோடி.. மோடி தந்த சர்ப்ரைஸ்

x

ஜார்க்கண்ட் மாநிலம் டாடா நகரில் சுமார் 660 கோடி ரூபாய் மதிப்பிலான ரயில்வே திட்டங்கள் மற்றும் 6 வந்தே பாரத் ரயில்களை தொடங்கி வைக்கும் பிரதமர் மோடி, வருகிற 16ஆம் தேதி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் 8,000 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைக்கிறார். தொடர்ந்து அகமதாபாத் மெட்ரோ ரயில் திட்டத்தை தொடங்கி வைத்து அதில் பயணம் செய்ய உள்ளார். வரும் 17ஆம் தேதி ஒடிசா செல்லும் பிரதமர், 3800 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். மேலும் ஒடிசா மகளிருக்கு 50 ஆயிரம் அளிக்கும் சுபத்ரா திட்டத்தையும் தொடங்கி வைக்கிறார்.


Next Story

மேலும் செய்திகள்