மோடி சொல்வது போல் நிஜமாகவே காங்கிரஸ் பெரும்பான்மைக்கு தேவையான 272 இடங்களில் போட்டியிடவில்லையா?

x

மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை பல்வேறு கட்ட பட்டியல் மூலம், காங்கிரஸ் வெளியிட்டு வந்த‌து. இந்நிலையில் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் அடங்கிய முழுமையான பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, மொத்தம் 328 தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிடுகிறது. 330 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், குஜராத் மாநிலம் சூரத், மத்திய பிரதேச மாநிலம் இந்து, ஆகிய தொகுதிகளில் வேட்பாளர்கள் வேட்புமனுக்களை திரும்ப‌ப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம், மக்களவை தேர்தல் வரலாற்றில், மிகக் குறைந்த எண்ணிக்கையில் காங்கிரஸ் போட்டியிடுவது இதுவே முதன் முறையாகும். கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் 421 தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிட்டிருந்த‌து. பெரும்பான்மைக்கு தேவையான இடங்களில் கூட போட்டியிடாத கட்சிக்கு வாக்களித்து மக்கள் ஏன் வாக்குகளை வீணடிக்க வேண்டும்? என்று பிரதமர் மோடி தொடர்ந்து விமர்சனத்தை முன்வைத்து வருவது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்