மொத்த உலகின் கவனத்தையும் ரஷ்யா பக்கம் திருப்பிய மோடி.. எகிறும் மேற்குலகின் பல்ஸ்

x

பிரதமர் மோடி 2 நாள் சுற்றுப்பயணமாக ரஷ்யா செல்லும் நிலையில் இருதரப்பு உறவு மேம்பாடு குறித்து இரு தலைவர்களும் விவாதிக்க உள்ளனர்...

இந்தியா - ரஷ்யா உச்சி மாநாட்டில் பங்கேற்க ரஷ்ய தலைநகர் மாஸ்கோவுக்கு பிரதமர் மோடி செல்லும் நிலையில் இருநாடுகளுக்கும் இடையே முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது... ரஷ்யா - உக்ரைன் போர் துவங்கியது முதல், முதன்முறையாக பிரதமர் மோடி ரஷ்யா செல்கிறார். அங்கு சென்றதும் பிரதமர் மோடிக்கு புதின் சிறப்பு விருந்து உபசரிப்பு வழங்குவார். அதன் பிறகு ரஷ்ய வாழ் இந்தியர்களை சந்திக்கும் பிரதமர் தொடர்ந்து போர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது... 2021ல் டெல்லியில் நடைபெற்ற இந்தியா ரஷ்யா உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள புதின் டெல்லி வந்திருந்த நிலையில் 2 ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு மீண்டும் மாநாடு நடைபெறுவது குறிப்பிடத்தக்கது...


Next Story

மேலும் செய்திகள்