திடீரென மாறிய பிளான்.. மோடி பிரதமராவதில் தாமதம்..? | PM Modi | BJP

x

மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றுள்ளதை அடுத்து, புதிய அரசை அமைப்பதற்காக, அந்த கூட்டணித் தலைவர்களின் ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. அப்போது, தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தலைவராக பிரதமர் மோடி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து, பிரதமர் மோடி உடனடியாக குடியரசுத் தலைவரை நேரில் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோருவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தேசிய ஜனநாயக கூட்டணியின் நாடாளுமன்ற குழு கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நாளை நடைபெறும் இந்தக் கூட்டத்தில், புதிய நாடாளுமன்ற உறுப்பினர்கள், பிரதமர் மோடியை தேசிய ஜனநாயகக் கூட்டணியின் நாடாளுமன்ற குழு தலைவராக தேர்வு செய்ய உள்ளனர். அதன் பிறகு, குடியரசுத் தலைவரை நேரில் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோருவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், இந்த கூட்டத்தில், வெகு விரைவில் பிரதமராக பொறுப்பேற்றுக் கொள்ளுமாறு மோடியை கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்