``பட்ஜெட்டில் தமிழகம் மீதான தேர்தல் கணக்கை தீர்த்துக்கொண்ட பாஜக'' - போட்டு தாக்கிய முதல்வர்

x

ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கை தமிழ்நாட்டிற்கு இழைக்கப்பட்ட மாபெரும் துரோகம் என்று முதலமைச்சர் ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார்.

அரசியல் சுயலாபங்களுக்காக குறிப்பிட்ட சில மாநிலங்களுக்கு மட்டும் நிதியை தாராளமாக அள்ளிக் கொடுத்தும், தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் மீது வன்மத்தைக் கக்கிடும் வகையிலும்

நிதிநிலை அறிக்கை உள்ளதாக முதலமைச்சர் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

நிதிநிலை அறிக்கை மூலம் தேர்தல் கணக்கை தீர்த்துக்கொள்ள ஒன்றிய பாஜக அரசு நினைத்திருப்பது வேதனைக்குரியது என்றும் தமிழ்நாட்டு மக்களை பாதிக்கக்கூடியது என்றும் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழகம் சமீபத்தில் சந்தித்த 2 தொடர் பேரிடர் இழப்புகளை சீரமைக்க 37,000 கோடி ரூபாய் பேரிடர் நிவாரணமாக வழங்குவதற்கான விரிவான அறிக்கையினை அளித்தும்

ஒன்றிய அரசு சுமார் 276 கோடி ரூபாய் மட்டுமே இதுவரை வழங்கியுள்ளதாக முநலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ஆனால் உத்தரகாண்ட், சிக்கிம், இமாச்சலப் பிரதேசம் மற்றும் அஸ்ஸாம் போன்ற மாநிலங்கள் மட்டுமின்றி, பீகார் மாநிலத்திற்கு மட்டும் 11,500 கோடி ரூபாய் பேரிடர் தடுப்புப் பணிகளுக்காக வழங்கப்பட உள்ளதாக மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது தமிழ்நாட்டு மக்களுக்கு செய்யும் மிகப்பெரிய அநீதியாகும் என்று முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்நாட்டின் நலன் முழுமையாக வேண்டுமென்றே புறக்கணிக்கப்பட வேண்டும் என்பது போல் ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கை அமைந்துள்ளதாக தெரிவித்துள்ள முதலமைச்சர் ஸ்டாலின் தமிழ்நாடு அரசு கோரியுள்ள பல்வேறு திட்டப்பணிகளுக்கான நிதி ஒதுக்கீடுகளை வழங்கிட வேண்டுமென்று மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்