மோடியிடம் முதல்வர் கொடுத்த கடிதம்.. தமிழகத்திற்கு அடுத்தடுத்து வரப்போகும் குட் நியூஸ் | DMK

x

டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை, முதலமைச்சர் ஸ்டாலின் சந்தித்து, பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவினை வழங்கினார்.

முதலமைச்சர் ஸ்டாலின், டெல்லி பிரதமர் அலுவலகத்தில், பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார். அப்போது, சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்திட தேவையான மத்திய அரசின் நிதி, சமக்ர சிக்க்ஷா திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு, இலங்கை கடற்படையினரால் இந்திய மீனவர்கள் கைது செய்யப்படும் விவகாரத்தில் நிரந்தர தீர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவினை வழங்கினார். இச்சந்திப்பின்போது, தி.மு.க. மக்களவை குழுத் தலைவர் டி.ஆர்.பாலு, தி.மு.க. நாடாளுமன்ற குழுத் தலைவர் கனிமொழி, தலைமைச் செயலாளர் நா.முருகானந்தம் ஆகியோர் உடனிருந்தனர்.


Next Story

மேலும் செய்திகள்