டெல்லி விரையும் CM.. PM உடன் திடீர் சந்திப்பு
பிரதமர் மோடியை சந்திப்பதற்காக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை டெல்லி புறப்படுகிறார்.
டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் தங்கவுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நாளை காலை 11 மணிக்கு பிரதமர் மோடியை சந்திக்க உள்ளார். அப்போது, தமிழக நலன் சார்ந்த திட்டங்களுக்கு நிதி ஒதுக்கும்படி வலியுறுத்துவதோடு, விரிவான கோரிக்கை மனு ஒன்றையும் பிரதமரிடம் முதலமைச்சர் வழங்க உள்ளார். சந்திப்பு முடிந்ததும் நாளை மாலையே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை திரும்புகிறார்.
Next Story