எதிர்கட்சி தலைவராக இருந்தபோது CM ஸ்டாலின் மீதான உரிமை மீறல் நோட்டீஸ்.. வழக்கின் தற்போதைய நிலை?

x

2017-ல் அதிமுக ஆட்சியில், சட்டப்பேரவைக்குள் குட்கா கொண்டு சென்றதாக அப்போது எதிர்க்கட்சி தலைவராக இருந்த மு.க. ஸ்டாலின், திமுக எம்.எல்.ஏ.க்களுக்கு எதிராக சட்டப்பேரவை உரிமை குழு, உரிமை மீறல் நோட்டீஸ் அனுப்பியது. இதற்கு எதிராக ஸ்டாலின், திமுக எம்.எல்.ஏ.க்கள் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், நோட்டீசை ரத்து செய்தது. இதற்கு எதிராக அதிமுக ஆட்சியில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற அமர்வு, தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தது. இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் தலைமையிலான அமர்வில் தீர்ப்புக்காக பட்டியலிடப்பட்டிருந்த வேளையில், வழக்கில் எதிர் மனுதாரர்களாக இருக்கும் திமுக எம்.எல்.ஏ.க்களுக்கு நோட்டீஸ் சென்றடையவில்லை என அரசு தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் தெரிவித்தார். இதனையடுத்து எம்.எல்.ஏ.க்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை ஜூலை 25 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்