"5½ அடியில் வடை.." -திமுக கூட்டணிக்கு சமையல் கலை முன்னேற்ற சங்கம் ஆதரவு
நாடாளுமன்றத் தேர்தலில், தமிழ்நாடு சமையல் கலை முன்னேற்ற சங்கம், திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. இதற்காக, சென்னை கொடுங்கையூரில் உள்ள சங்கத்தின் தலைமை அலுவலகத்தில், பிரதமர் மோடி அரசின் பத்தாண்டு கால ஆட்சியை விமர்சிக்கும் வகையில் ஐந்தரை அடி அளவில் மாதிரி வடை செய்து வைத்துள்ளனர். வெளிநாடுகளில் இருந்து கருப்பு பணத்தை மீட்போம், பெட்ரோல் விலையை குறைப்போம், வேலை வாய்ப்புகளை உருவாக்குவோம் என்று மத்திய பாஜக அரசு அளித்த வாக்குறுதிகளை சித்தரித்து, மாதிரி வடையை செய்து வைத்துள்ளதாக, தமிழ்நாடு சமையல் கலை முன்னேற்ற சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் இனியவன் தெரிவித்தார்.
Next Story